அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் : மத்திய இணையமைச்சர் எல். முருகன் வழங்கினார்!!
Author: Udayachandran RadhaKrishnan14 April 2022, 4:13 pm
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்துள்ளனர்.
இன்று சித்திரை வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கரின் ஜெயந்தியும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அரசியல் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், சித்திரை வருடப் பிறப்பு, டாக்டர். பீம்ராவ் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை திருவெல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்துள்ளனர்.