என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க.. இதுவா உங்க லாஜிக் : பீஸ்ட் படத்த பத்தி பேச லாக்கி இல்லாத கேஜிஎஃப் 2.. நெட்டிசன்கள் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan15 April 2022, 1:52 pm
நடிகர் யாஷ் நடித்த கேஜிஎஃப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால் மக்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்த படக்குழு தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாகத்தில் லாஜிக் இல்லாத சீன்கள் வைத்துள்ளனர் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
லாஜிக் இல்லாத சீன்களை வைத்தும் கேஜிஎஃப் பாகம் இரண்டை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். குறிப்பாக ஒரு காட்சியில் ஹீரோயின் கரண்ட் இல்லை என்று சொல்வாராம். அதற்கு ஹீரோ ஒரு ஹெலிகாப்டரயே கொண்டு வந்து மாடியில் நிறுத்தி விடுவாராம். இந்த சீனை கேட்கும் போதே படு கேவலமாக இருக்கிறது. ஆனால் இதை மக்கள் நம்புவார்கள் என்று எப்படி படக்குழு முடிவு செய்து இப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள்.
அதே போல இன்னொரு காட்சியில், ஹீரோ பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அவரையே அடிக்க செல்வாராம். அதுமட்டுமல்லாமல் பார்லிமென்ட்டில் புகுந்து அனைவரையும் சுட்டு விடுவாராம். அதில் ஒரு மந்திரி கூட இல்லாமல் அனைவரும் இறந்து விடுவார்களாம்.
மேலும் கூலிங்கிளாஸ் கண்ணாடியை கழட்டாமலே பறந்து பறந்து சண்டை போடுகிறார். ஆனால் அந்த கூலிங்கிளால் கீழே கூட விழுகாது. படம் முழுக்க பில்டப்பும், பிரம்மாண்டமும் தான் உள்ளது அதை தவிர வேற ஒன்ணும் இல்லை.
சின்ன சின்ன லாஜிக்தான் படத்தில் இடிக்குது. இதைப்பார்த்த ரசிகர்கள் நாங்கள் என்ன முட்டாளா என கேள்வி எழுப்பியுள்ளனர். பீஸ்ட் படத்தில் லாஜிக் இல்லை என்று சொல்பவர்களை விட கேஜிஎஃப் படத்தில் லாஜி இல்லை என்று கூறுபவர்கள் அதிகமாகியுள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால் ரசிகர்கள் இப்படத்தை ஆகா ஓகோ என புகழ்கின்றனர் இதற்கு காரணம் என்னவென்றால் ஒரு சிலருக்கு விஜய் உடைய வளர்ச்சி பிடிக்காமல் இருப்பதுதான் காரணம் எனவும் கூறி வருகின்றனர்.