சூடு பிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2022, 2:55 pm

கோவை : கோடநாடு வழக்கு குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம், கோடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், 2 மாதத்துக்கு பிறகு இன்று நடைபெறுகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு சம்பவம் நடந்தபோதே அப்போது கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., வாக இருந்த ஆறுக்குட்டியிடம் அப்போது இந்த வழக்கை விசாரித்து வந்த உதகை எஸ்.பி., விசாரணை நடத்தியிருந்தார்.

தற்போது, மீண்டும் மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1389

    0

    0