இரவு நேரத்தில் பரபரப்பு… திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளான புதுச்சேரி எக்ஸ்பிரஸ்… உயிர்தப்பிய பயணிகள்..!

Author: Babu Lakshmanan
16 April 2022, 8:49 am

புதுச்சேரி விரைவு ரயில் மாட்டுங்கா ரயில்நிலையம் அருகே திடீரென தடம்புரண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.

தாதர் – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் என்னும் விரைவு ரயில் புதுச்சேரி – மும்பை இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்றிரவு மும்பை மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் மற்றும் அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையிலும், திடீரென ரயில் தடம்புரண்டதால், பதற்றமும், பயத்துடனும் அவர்கள் காணப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணையும் உடனடியாக துவங்கப்பட்டு நடந்து வருகிறது.

இருப்பினும், முதற்கட்ட விசாரணையில், ரயில் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே அடுத்த தண்டவாளத்தில் சென்ற ரயிலுடன் உரசியதால் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தினால், ரயில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…