எஸ்டிபிஐ தொண்டர் கொலைக்கு பழிக்கு பழி? ஆர்எஸ்எஸ் பிரமுகர் படுகொலை… சினிமா ரேஞ்சில் நடந்த MURDER : பரபரப்பில் பாலக்காடு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2022, 3:52 pm

கேரள மாநிலம் பாலக்காடு அருகே எலப்பள்ளி பாறையை சேர்ந்த அபுபக்கர் என்பவரின் மகன் சுபைர். இவர் எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினராக உள்ளார். நேற்று இவரும் இவரது தந்தையும் இருசக்கர வாகனத்தில் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு சென்றனர்.

அப்போது, அந்த வழியாக ஒரு கார் வேமாக வந்து பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் சுபைரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதையடுத்து சுபைர் மயக்கமடைந்தார்.

ஆனால் சிறிது நேரதிதில் துடிதுடிக்க உயிரிழந்தார். இதைக்கண்ட அவரது தந்தை அலற, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே அந்த இடத்தில் மர்மநபர்கள் தப்பியோடினர். தகவல் அறிந்த போலீசார் சுபைரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த காரை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைத்தார்.

இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் வெடிக்கொலை செய்யப்பட்டார். அவரையும் இதே போல காரில் வந்த கும்பல் வெட்டி கொன்றது தெரியவந்துள்ளது. அந்த சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்க சுபைர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பாலக்காட்டில் மேலமுரி நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் கடையில் இருந்த போது, 3 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

அதில் படுகாயமடைந்த ஸ்ரீனிவாசன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மர்ம கும்பல் 20 முறை அரிவாளால் வெட்டியதாக தெரிவித்தனர். 5 பேர் கும்பலை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

ஸ்ரீனிவாசன் கொலைக்கு பின்னால் எஸ்டிபிஐ உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அடுத்தடுத்த கொலையால் பாலக்காடு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 1242

    0

    0