போதும்டா சாமி.. நெல்சனுக்கு டாட்டா காட்டும் சன் பிக்சர்ஸ்? தலைவர் 169வது படத்தை இயக்கும் வாய்ப்பை பறித்த இயக்குநர்!!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2022, 5:05 pm
நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்து தற்போது வசூலில் சொதப்பி வருகிறது.
பீஸ்ட் வெளியான மறுநாள் கேஜிஎப் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் பீஸ்ட் படத்தின் வசூல் பாதிக்காது. ஆனால் வரும் திங்கட்கிழமை முதல் கேஜிஎஃப் 2 அதிக ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்புள்ளது.
இதனால் சன்பிக்சர்ஸ் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் பீஸ்ட் வெளியாகும் முன்பே ரஜினி படத்தை நெல்வன் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ரஜினியின் 169வது படம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இதனால் சன்பிக்சர்ஸ் தற்போது நெல்சனுடன் பணிபுரிய யோசித்து வருவதாகவும், நெல்சனுடன் பணியாற்றலாமா வேண்டாமா என்ற முடிவை ரஜினியிடமே சன்பிக்சர்ஸ் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஒரு வேளை நெல்சன் ஓகே இல்லை என்றால், 169வது படத்தை இயக்கு வாய்ப்பு அட்லீ அல்லது தேசிங்கு பெரியசாமிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ஆஸ்தான இயக்குநர்களில் அட்லீ ஒருவர் என்பது தெரிந்ததே, அவர் இயக்கிய படம் காப்பி என்று குறை கூறினாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
அதே போல தேசிங்கு பெரியாசமி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கி வெற்றியும் கண்டார். ஏற்கனவே ரஜினி இவருடன் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.