விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’: புதுவையில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா..!!
Author: Rajesh17 April 2022, 10:26 am
விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் புதுச்சேரியில் நடைபெற்றது.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாமனிதன், இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இப்படத்திற்கு இசையமைக்க, தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே சுரேஷ் இந்த படத்தை வெளியிடுகிறார்.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரி 100அடி சாலையில் உள்ள தனியார் கலை அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி, இயக்குநர் சீனு ராமசாமி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகரும் வெளியிட்டாளருமான ஆர்.கே சுரேஷ், கவிஞர் பா.விஜய், இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் புதுச்சேரி முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சம்பத் ஆகியோர் பங்கேற்று இத்திரைப்படத்தின் இசை தகுடை வெளியிட்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் பா.விஜய் புதுச்சேரி சேர்ந்த ஒரு எழுத்தாளன் தான் மொழிக்கு மீசை முளைக்க வைத்தவன் என்றும் அவன் பாரதிதாசன் என்றும் பெருமையுடன் பேசினார், அந்த மாமனிதன் பிறந்த மாநிலத்தில் இநத மாமனிதனின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார், உலகிலேயே ஒரு ஆணுடைய முத்தத்தை ஒரு ஆண் விரும்புகிறான் என்றால் அது விஜய்சேதுபதியின் முத்தம் தான் என பா.விஜய் பேசியது அரங்கை அதிர செய்தது, தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் பா.விஜய் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து கண்ணத்தில் முத்தமிட்டு கொண்டனர்.