அசுரர்களை களையெடுக்கும் நேரம் நெருங்கிவிட்டது : தமிழகத்திலும், கேரளாவிலும் ஆட்சி கலைப்பு வரும்…அண்ணாமலை பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2022, 5:36 pm

கன்னியாகுமரி : அதிவிரைவில் தமிழகத்திலும் கேரளாவிலும் அசுரர்கள் களையெடுப்பு நடந்து ஆட்சி அகற்றப்படும் என குமரி மாவட்டம் காளிமலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் காளிமலை பொங்கல் நிகழ்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் நீட்டில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், இரத்த தான கொடையாளர்கள், இயற்கை விவசாய்கள், பழங்குடியின மக்களுக்கு இலவச கல்வி அளிக்கும் ஆசிரியர் , இலவச மருத்துவம் அளிக்கும் மருத்துவர் சிறந்த ஆன்மீக யூட்டூப்பர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கபட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, யாரோ வந்து அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க ஆண்டவர் விரும்பவில்லை, கட்சி தொண்டர்கள் , தலைவர்கள் நம்மை தயார்படுத்தி கொண்டு இருக்கிறோம்.

ஆன்மா சுத்தபடுத்தபட்டு கொண்டு அந்த பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். நாம் தயார் நிலையில் இருக்கும்போது ஆண்டவன் கட்டளையிடுவான். அப்போது மிக விரைவில் அசுரர்கள் களையெடுப்பு நடக்கும் அந்த நேரத்தில் கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்படும் , தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அகற்றப்படும் நம் ஆட்சி அமையும் என பேசினார். தொடர்ந்து பழங்குடியின மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களோடு கலந்துரையாடலில் ஈடுபட்டார்

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1346

    0

    0