அதிரடி காட்டிய லிவ்விங்ஸ்டோன்…பின்தங்கிய பஞ்சாப் : 4வது வெற்றியை பெற்று 4வது இடத்திற்கு முன்னேறிய ஐதராபாத் அணி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2022, 8:15 pm

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28-வது போட்டியில் ஹைதராபாத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள்.

இதில் 3 ரன்கள் மட்டுமே அடித்து கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழக்க, ராகுல் திரிபாதி களமிறங்கினார். அபிஷேக் ஷர்மாவுடன் கூட்டணி போட்டு இருவரும் சிறப்பாக ஆட, 34 ரன்கள் எடுத்து ராகுல் திரிபாதி தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஏய்டன் மார்க்கம் களமிறங்க, 31 ரன்கள் அடித்து அபிஷேக் ஷர்மா தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து நிக்கோலஸ் பூரண் களமிறங்க, ஏய்டன் மார்க்கமுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இறுதியாக ஹைதராபாத் அணி, 18.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 152 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் தனது நான்காம் வெற்றியை பதிவு செய்தது. மேலும் புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி 4-ம் இடத்திற்கு முன்னேறியது.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 1127

    0

    0