கோவையிலும் இனி படகு சவாரி… வாலாங்குளத்தில் வருகிறது போக்குவரத்து சேவை : வெளியான சூப்பர் தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan17 April 2022, 10:49 pm
கோவை மாவட்டம், வாலாங்குளத்தில் மாநகராட்சியுடன் இணைந்து படகு போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று திறந்து வைத்தார்.
அங்கு பயணிகளை கவரும் விதமாக நாட்டுபுற கலைகளின் ஓவியங்கள் மற்றும் கோவையில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்களை கொண்ட பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வாலாங்குளத்தில் மாநகராட்சியுடன் இணைந்து படகு போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், விமான நிலைய வெளிப்பகுதிகளில் அழியாறு, மேகமலை, வால்பாறை, மருதமலை புகைப்படங்களும், தனுஸ்கோடி படங்களும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.