நிர்வாக பணிகளை விரைவாக முடிக்க பேரூராட்சிகளின் பொதுநிதி உச்சவரம்பு உயர்வு : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan18 April 2022, 9:13 pm
நிர்வாக பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்தும் நிதி உச்சவரம்பு முதல், 2ம் நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நிர்வாக பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்தும் நிதி உச்சவரம்பு முதல், 2ம் நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தேர்வுநிலை, சிறப்புநிலை பேரூராட்சிகளுக்கு ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.