40 கதை அஷ்வினை பின்பற்றும் மற்றொரு குக் வித் கோமாளி பிரபலம்.. ஓவர் சீன் ஆகாதுங்க..!

Author: Rajesh
19 April 2022, 10:59 am

சின்னத் திரையில் பிரபலமாக ஆகி பின்னர் சினிமாவில் சாதித்து வருபவர்கள் தற்போது அதிகரித்து கொண்டே வருகின்றனர். அதிலும் விஜய் டி.வியில் பிரபலமாக இருக்கும் பலரும் பெரிய அளவில், வருகின்றனர். அந்த வரிசையில், சந்தானம், சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர், குக் வித் கோமாளி புகழ் ஆகியோரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களை தொடர்ந்து வந்தவர் தான் அஸ்வின். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக மாறிய இவர், 40 கதையை கேட்டு தூங்கி விட்டேன் என்று ஓவர் பேச்சால் பல சர்ச்சைகளை எதிர் கொண்டார்.

அவரை தொடர்ந்து அடுத்த சர்ச்சையில் தற்போது அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி சிக்கியுள்ளார். இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.
அதில் இவருடைய சின்ன சின்ன சேட்டைகளும், வெகுளித்தனமாக பேச்சும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. இன்றளவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக அவரே கூறிக்கொள்வார்.

இதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைத்தது. தற்போது இவர் டான், காசேதான் கடவுளடா, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருவதால் அவருடைய நடவடிக்கைகளும் மாறி விட்டதாக தெரிகிறது.
முன்பெல்லாம் ஏதாவது கடை திறப்பு விழாவிற்கு இவரை அழைத்தால் உடனே ஒப்புக் கொள்வாராம். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. இப்போது இவர் கடை திறப்பு விழாவிற்கு வர வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என்று கேட்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் இவரிடம் தங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று யாராவது கேட்டால் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறாராம். முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பு நிறுவனம், ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் இப்படிப்பட்டவர்களின் படங்களில் தான் நடிப்பேன் என்று கறாராக கூறுகிறாராம்.

இதனால் அதிர்ந்து போன பலரும் ஏன் என்று கேட்டால் நான் இப்போது பெரிய செலிபிரிட்டி என்று கூறுகிறாராம். நடித்த முதல் படமே வெளியாகவில்லை அதுக்குள்ள இவ்வளவு அலப்பறையா என்று இவரைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர். மேலும் இப்படித்தான் அஸ்வின் ஓவராக ஆட்டம் போட்டு தற்போது அடங்கி போய் இருக்கிறார். அவரின் நிலை இவருக்கு வராமல் இருந்தால் சரிதான் என்றும் கிசுகிசுக்கின்றனாராம்.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 1239

    0

    0