லீவு எடுத்தால் ஊக்கத் தொகையில் சம்பளம் பிடிப்பு : மாத ஊதியம் வழங்கக் கோரி பழனியில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2022, 1:52 pm

திண்டுக்கல் : பழனியில் கோவில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் சண்முகநதி, சரவணப்பொய்கை , ஒருங்கிணைந்த முடி மண்டபம், மின் இழுவை ரயில் எதிரே உள்ள முடி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் 330 பணியாளர்கள் மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் 330 தொழிலாளர்கள் சுமார் 60 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களை நிரந்தரப் பணியாளர்கள் மாற்றி மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை தருவதாக அறிவித்தது. ஆனால் ஊக்கத்தொகை என்பதே மாதத்தில் ஒரு முறை வழங்கப்படும். இந்த 5 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை அறநிலையத்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் அந்த ஊழியரிடம் ஊக்கத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருவதால் ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

பக்தர்களிடம் பணம் தரக்கூடாது என்று கூறியும் மக்களிடம் பணம் பெறுபவர்கள் மீது தற்காலிக பணி நீக்கம் என்பது செய்யப்பட்டு 60 நாட்களுக்கு அவர்களுக்கு பணி இல்லை என்று கூறப்படுகிறது.

60 நாட்களுக்குப் பிறகு ஏழு நாட்கள் அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து நன்னடத்தைச் சான்றிதழ் அங்கிருக்கும் சூப்பிரண்டிடம் வாங்கினால் மட்டுமே பணியில் சேர முடியும் என்ற இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பணி நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்திட, வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கோவில் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 1158

    0

    0