நடிகை கடத்தல் வழக்கு…விசாரணை அதிகாரியை மிரட்டிய விவகாரம்: நடிகர் திலீப்பின் கோரிக்கை நிராகரிப்பு..!!
Author: Rajesh19 April 2022, 3:31 pm
திருவனந்தபுரம்: நடிகை பாலியல் தொல்லை வழக்கில் விசாரணை அதிகாரிகளை மிரட்டிய விவகாரத்தில் நடிகர் திலீப் மீதான வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகையை கடத்தில் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விசாரணை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மலையாள நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நடிகர் திலீப் உள்பட 6 பேர் மீது சைபர் க்ரைம் போலீஸ் பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2017ல் கேரள நடிகையை கடத்தி வன்கொடுமை செய்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்டதாக நடிகர் திலீப் உள்பட 6 பேர் மீது ஜனவரி 9ல் வழக்கு பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென்ற நடிகர் திலீப் கோரிக்கையும் நிராகரித்தது. நடிகை துன்புறுத்தப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி நடந்தது குறித்து தொடர்ந்து விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.