மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பீஸ்ட் கொண்டாட்டம்… விஜய் ரசிகர் செய்த செயலால் நெகிழ்ச்சி…!!

Author: Babu Lakshmanan
20 April 2022, 2:55 pm

கோவையில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தை பார்க்க ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை, விஜய் ரசிகர் ஒருவர் திரையரங்கம் அழைத்துச்சென்று மகிழ்வித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் பீஸ்ட் படம் பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதை அறிந்த விஜய் ரசிகரும், தன்னார்வலருமான நவீன் ரோஷன் என்பவர் மாற்றுத்திறனாளி இல்லத்தில் வசித்து வரும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளை, தனது சொந்த செலவில் அழைத்து வந்து கோவை போத்தனூர் பகுதியில் உள்ள அரசன் திரையரங்கில் பீஸ்ட் படம் பார்க்க வைத்தார்.

படம் ஆரம்பித்து திரையில் விஜய்யை பார்த்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் தன்னை மறந்து சந்தோசமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

இது குறித்து நவீன் ரேசன் கூறும் போது :- கோவை போத்தனூர் அருகே உள்ள மாற்றுத்திறனாளி இல்லத்தில் இருக்கும், குழந்தைகளில் பெரும்பாலானோர் விஜய் ரசிகர்களாக உள்ளனர். அவர்கள் பீஸ்ட் படத்தை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டதால் அழைத்து வந்துள்ளேன்.

பொதுவாக திரைப்படம் வெளியாகும்போது 100 அடி உயரத்திற்கு கட்டவுட் வைத்து கொண்டாடுவதை, விட இம்மாதிரி வெளியே செல்ல வாய்ப்பு இல்லாமல், திரையரங்கில் திரைப்படங்களை பார்க்க வாய்ப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகளை படத்திற்கு அழைத்து வருவதை நடிகர் விஜய் விரும்புவார்.

இதேபோல் மீண்டும் அடுத்தப் படத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வோம் எனவும் தெரிவித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்க உள்ளதாக தெரிவித்தார்

  • Sawadeeka Song Lyric Video Releaseபோடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
  • Views: - 1180

    1

    0