தனிமையில் இருந்த காதல் ஜோடி… கண்விழித்துப் பார்த்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காதலனின் விபரீத முடிவால் அம்பலமான கதை..!!

Author: Babu Lakshmanan
20 April 2022, 6:16 pm

மதுரையில் காதல் ஜோடி தனிமையில் இருந்த நிலையில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஞானஒளிபுரம் பகுதியை சேர்ந்த ஜெப்ரி சால்ஸ் என்ற வாலிபர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் 2ம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதல் ஞானஒளிபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது கடந்த இளம்பெண்னை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் நேற்று தங்கிய நிலையில், இன்று காலை இளைஞர் ஜெப்ரிக் சார்லஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து இளம்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற சுப்ரமணியபுரம் காவல்நிலைய போலீசார் இளைஞரின் உடலை மீட்டு கொலை செய்து தூக்கில் தொங்கி விடப்பட்டாரா..? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்னுடன் ஒரே அறையில் இருந்தபோது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இளம்பெண்ணிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 1276

    2

    0