தமிழ் சினிமாவில் கிராமத்து ஸ்டெலில் கலக்கி ரசிகர்களில் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகர் வடிவேலு. கிராமங்களில் அங்கு நடக்கும் விஷயங்கள் போன்றவற்றை தான் நடிக்கும் படங்களில் நகைச்சுவையாக வைத்து வெளிப்படுத்தியிருப்பார். மேலும் அவருடைய காமெடிகளை ரெடி செய்வதற்காக ஒரு டீம் எப்போதுமே தயாராக இருக்கும். மேலும் அவர் ஊரில் இருந்து ஆட்களை வர வைத்து இரவு முழுவதும் அவர்களுடன் பேசி அதிலிருந்து சில காமெடிகளை உருவாக்கி கொள்வாராம் வடிவேலு.
இந்நிலையில் வடிவேலுவின் பழைய டீம் மேட்ஸ் சிங்கமுத்து, இறந்துபோன அல்வா வாசு, சிசர் மனோகர், அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் புகழ் நடிகர் என இப்போது யாருமே வடிவேலுயிடம் இல்லை. ஏனென்றால் சில காலம் வடிவேலு படங்களில் நடிக்கத் தடை விதித்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனால் அவர்கள் எல்லாம் வேறொரு டீம் அமைத்து காமெடி ட்ராக் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வடிவேலு தடைக்காலம் நீங்கி மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வடிவேலுடன் ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி நாராயணன், ஆனந்த்ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் வடிவேலு படங்களில் சற்று வித்யாசமாக நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால் வடிவேலுவின் பழைய காமெடி டீம் இல்லாததால் இப்படம் புது காமெடி டிராக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. இருந்தாலும் அந்த பழைய டீம் இல்லாததால் அவருக்கு சற்று மனவருத்தம் இருக்கிறதாம். மேலும் தற்போது வடிவேலு தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் பல வருடங்களுக்கு வடிவேலுவின் நகைச்சுவை காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இப்படங்கள் அமையுள்ளது.