கொஞ்சம் கூட கசப்பு தெரியாமல் டேஸ்டான மொறு மொறு பாகற்காய் வறுவல்!!!

Author: Hemalatha Ramkumar
22 April 2022, 4:05 pm

பாகற்காய் மிகவும் கசப்புத்தன்மை உடையது என்றாலும் , உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. பாகற்காயை வைத்து குழம்பு, வறுவல் வகைகள் என பல உண்டு. ஆனால், நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி பாகற்காய் மசாலா வறுவல். பாகற்காயின் உள்ளே மசாலா வைத்து செய்யப்படும் ஒரு ரெசிபி. இந்த பாகற்காய் மசாலா வறுலை வைத்து சாம்பார் சாதம், தயிர் சாதம், இவற்றுடன் சேர்த்து தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். பாகற்காய் மசாலா வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 3
வெங்காயம் – 3
பூண்டு – 5 பற்கள்
தேங்காய் – 3 சில்
இஞ்சி – 1 இன்ச்
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*பாகற்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு பாகற்காயை எடுத்து பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். இப்படி, 3 பாகற்காயையும் பாதியாக வெட்டி அதில் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்

*பிறகு , ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு, தேங்காய்‌ சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

*பின்பு வெட்டி வைத்துள்ள பாகற்காயை எடுத்து , பாகற்காயின் உள்ளே அரைத்த விழுதை சேர்த்து கொள்ளவும்.

*பின்பு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். மசாலா சேர்த்து வைத்துள்ள பாகற்காயை எண்ணெயில் போட்டு.

*10 நிமிடம் மூடி போட்டு வேக வைத்து கொள்ளவும்.பிறகு , தண்ணீர் சிறிதளவு தெளித்து. 10 நிமிடம் வேகவிடவும்.

*தண்ணீர் வற்றிய பின்பு , எண்ணெய் சுருண்டு மசாலா வறுவல் பதத்திற்கு வந்ததும். ஒரு கொத்து கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

*இப்போது சுவையான , ஆரோக்கியமான பாகற்காய் மசாலா வறுவல் தயார்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 1410

    0

    0