கேஜிஎப்-ஆல் பின்வாங்கிய ஆர் ஆர் ஆர்… இதுவரை இவ்வளவு தான் வசூல் செய்துள்ளதா..?

Author: Rajesh
22 April 2022, 5:55 pm

இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த படம் தான் ஆர்ஆர்ஆர். வெளிநாடுகளிலும் வசூல் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இப்படம் வெளிநாடுகளில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படம் இந்தி பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது. இங்கும் முந்நூறு கோடிகள் சம்பாதித்தது.. இப்படம் நான்கு வார வசூலை பெற்றுள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 1100 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் 350 கோடியும், இந்தியில் சுமார் ரூ.270 கோடி வசூலித்துள்ளதாக வர்த்தகக் குழுக்கள் மதிப்பிட்டுள்ளன. தென்னிந்தியாவில் கன்னடம், தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்தியாவில் இருந்து மட்டும் எழுநூறு கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளது.

இதன் மூலம் அதிக வசூல் செய்த பாகுபலிக்கு அடுத்தபடியாக ஆர்ஆர்ஆர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், ரூ.1100 கோடி வசூல் செய்துள்ளது. முதல் மூன்று வாரங்கள் கொடிகட்டி பிறந்த ஆர் ஆர் ஆர், கேஜிஎப்2, வரவால் அதன் வசூல் குறைந்தது. முற்றிலும் மந்தமானது. கேஜிஎஃப் அத்தியாயம் 2 ரிலீஸுக்கு முன்பே சுமார் 1000 கோடிவசூல் ஆனா இந்தப்படத்திற்கு தற்போது வரை 100 கோடி வசூல் மட்டுமே ஆகியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1282

    4

    0