விரைவில் சிறைக்கு செல்லும் பிரபல நடிகர்.. நில மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நட்சத்திர தம்பதி : ஜாமீனில் வெளிர முடியாதபடி பிடிவாரண்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2022, 11:15 am

திரைப்பட நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர இயலாத வாரன்ட் பிறப்பித்து நகரி நீதிமன்றம் உத்தரவு.

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் ராஜசேகர். அவருடைய மனைவி தான் நடிகை ஜீவிதா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பி.எஸ்.வி கருடா வேகா என்ற பெயரிலான தெலுங்கு திரைப்படம் திரைக்கு வந்தது. அந்த திரைப்படத்தில் ராஜசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் பி.எஸ்.வி கருடா வேகா சினிமாவை தயாரித்த ஜோ ஸ்டார் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமா நகரி காவல்நிலையத்தில் ஜீவிதா மீது பணமோசடி புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நிலம் மற்றும் தேனியில் 20 ஏக்கர் நிலம் என அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தை அடமானமாக வைத்து பட தயாரிப்புக்காக 26 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டனர்.

Jeevitha gets a huge shock on her daughter's birthday

தற்போது அந்த நில பத்திரங்கள் தொலைந்து விட்டதாக ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து அதே நிலத்தை சென்னையைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி என்பவருக்கு விற்பனை செய்ததாகவும் ஜீவிதா பணத்தை திருப்பி கொடுக்காமல் தங்களை ஏமாற்றி விட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

Non-bailable warrant against actors Jeevitha, Rajasekhar | Bollywood News –  India TV

மேலும் இது தொடர்பாக நகரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையை ஏற்று கொண்ட நீதிமன்றம் ஜீவிதா மீது ஜாமீனில் வெளிவர இயலாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹேமா, ஜீவிதா ராஜசேகர் ஆகிய இரண்டு பேரும் மிகவும் நல்லவர்கள் போல் சமூகத்தில் நடமாடி கொண்டிருக்கிறார்கள்.

Jeevitha Rajasekhar to sell 200 crore property - The Post Reader

இவர்கள் எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காத காரணத்தால் நாங்கள் தொழில் நடத்த இயலாத நிலையில் இருக்கிறோம். ஜீவிதாவை நம்பவே கூடாது. வழக்கில் ராஜசேகர் விரைவில் சிறைக்கு செல்வார் என்று கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1366

    0

    0