11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைப்பு : அரசு தேர்வுத்துறை எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2022, 1:37 pm

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுக்கான நேரத்தை குறைத்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்ததில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நாளை மறுநாள் முதல் 28ம் தேதி வரையும், ஏப்ரல் 28 முதல் மே 2ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

கடந்த ஆண்டுகளில் உயிரியல், வேதியல், இயற்பியல் உள்ளிட்ட தேர்வுகளுக்கு செய்முறைத் தேர்வு 3 மணி நேரம் நடைபெற்றது. ஆனால் இந்த கல்வியாண்டில் செய்துறை தேர்வுக்கான நேரத்தை ஒரு மணி குறைத்துள்ளது.

அதாவது, 3 மணி நேரம் நடைபெறும் தேர்வு இனி 2 மணி நேரம் மட்டுமே நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

அதில் 20 மதிப்பெண்கள் அகமதீப்பீடு வழங்கப்படுகின்றன. எனவே 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை தேர்வு என்பதால் அதனை 2 மணி நேரமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!