வெல்லம், அப்பளம் உட்பட 143 பொருட்களின் GST வரி உயர்த்த முடிவு : 28% உயர்த்த மத்திய அரசு திட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 1:11 pm

அன்றாட சாப்பிட தேவைப்படும் சமையல் பொருட்களான அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 143 பொருட்களின் சரக்கு & சேவை வரியை 18%-லிருந்து 28% ஆக உயர்த்துவதற்கான மாநிலங்களின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,143 பொருட்களில் அப்பளம், வெல்லம், பவர் பேங்க்கள், கைக்கடி காரங்கள், சூட்கேஸ்கள், கைப்பைகள், வாசனை திரவியங்கள், கலர் டிவி செட்கள் (32 அங்குலத்திற்கு கீழே), சாக்லேட்டுகள், சூயிங்கம், வால்நட், கஸ்டர்ட் பவுடர், மது அல்லாத பானங்கள்,பீங்கான் மூழ்கிகள், பாத்திரம் கழுவும் தொட்டிகள், கண்ணாடிகள், கண்ணாடிகளுக்கான பிரேம்கள் மற்றும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் ஆகியவை அடங்கும்.

2017 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னர் வரி குறைக்கப்பட்ட பொருள்களுக்கு தற்போது வரி உயர்த்தப்படுகிறது.அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,143 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை 18%-லிருந்து 28% ஆக உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1129

    0

    0