மலேசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 5,624 பேருக்கு தொற்று பாதிப்பு…9 பேர் உயிரிழப்பு..!!

Author: Rajesh
24 April 2022, 4:01 pm

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 44,27,067 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 35,491 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து 10,041 பேர் குணமடைந்தனர்.

இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 43,10,599 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் 80,977 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 73,767 டோஸ்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 84.8 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

81.2 சதவிகிதம் பேருக்கு இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 49 சதவிகிதம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை மலேசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்