சரும பொலிவு முதல் முகப்பரு வரை… எல்லாத்துக்கும் இந்த ஒரு பொருள் போதும்!!!

Author: Hemalatha Ramkumar
24 April 2022, 7:12 pm

கோடை காலத்தில் உங்கள் முகம் பொலிவு இழந்து காணப்படுகிறதா. அப்படியென்றால் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி பாருங்கள். கற்றாழை முகத்திற்கு ஏற்ற சிறந்த தோழன் கற்றாழையை பயன் படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யலாம். கற்றாழை வைத்து வீட்டிலேயே எப்படி முகத்தை பொலிவாக வைத்து கொள்வது என்று பார்ப்போம்.

*கற்றாழையின் நன்மைகள்:
கற்றாழை இயற்கையாக கிடைக்க கூடியது. இந்த கற்றாழையை பயன் படுத்துவதால் நமது சரும‌ பிரச்சினை அனைத்தையும் சரி செய்யலாம். கற்றாழை ஜெல் குளிர்ச்சி தன்மை கொண்டிருப்பதால் , கூந்தல் மற்றும் சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. ஆனால், கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லை விட . இயற்கையாக செடியில் பிய்த்து அதன் ஜெல்லை பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

இப்போது, கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி முகத்தை எப்படி பொழிவுடன் வைத்து கொள்வது என்று பார்ப்போம்.

*கரும்புள்ளிகள் மறைய:
முதலில் முகத்தை நன்கு கழுவி விட்டு. கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி, தினமும் செய்வதால் வயதாவதால் ஏற்படக்கூடிய ‌கரும்புள்ளிகள், தழும்புகள், பிம்பிள் தழும்புகள் மறைய வைக்கும்.

*முகத்தில் ஏற்படக்கூடிய கருமையை போக்கும்:
வெயிலில் அதிகம் சுற்றி திரியும் போது, முகமானது‌ கருமை‌ நிறமடையும். இப்படி ஏற்படக்கூடிய கருமையை போக்க தினமும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.

*சருமம் பொலிவு பெற:
கஸ்தூரி மஞ்சள், பால், கற்றாழையை ஒன்றாக சேர்த்து . முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும்.இப்படி செய்து வந்தால் சருமம் பொலிவுடன் காணப்படும்.

*இப்படி, இயற்கையாக கற்றாழை ஜெல்லை எடுத்து பயன்படுத்துவதன் மூலம். நம் முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்து கொள்ளலாம்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!