சாதி மதத்தால் தமிழகத்தை பிரிக்க சிலர் நினைக்கிறார்கள் : ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 8:03 pm

தமிழகத்தை சாதி, மதத்தால் சிலர் பிரிக்க நினைக்கிறார்கள் என ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்-

சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழகத்தை சாதி, மதத்தால் சிலர் பிரிக்க நினைக்கிறார்கள். அந்த சதியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மதம், சமய நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள்; ஆனால், நாம் அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும், அப்படி செயல்பட்டால் கிடைக்கும் நன்மை அதிகம் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் அங்கிருந்தவர்களுடன் இணைந்து நோன்பு கஞ்சி பருகினார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?