பிரேக் இயங்காததால் நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரயில் : பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 9:29 pm

சென்னை, கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகமாக சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரேக் சரியாக இயங்காததால், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியானது. வேகமாக வந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 1277

    1

    0