அதிகரிக்கும் கொரோனா பரவல்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?

Author: Rajesh
25 April 2022, 10:16 am

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசம், டெல்லி, பீகார் மாநிலங்களில் அதிகளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் சூழலில், சென்னை ஐஐடியில் மட்டும் 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்திய தமிழக அரசு, முகக்கவசம் அணியாதவர்களிடம் தலா 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவித்தது.

இந்த சூழலில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1133

    0

    0