உருளைக்கிழங்கு மசால்: சாம்பார், தயிர் சாதத்திற்கு இத விட பக்கா சைட்டிஷ் இருக்கவே முடியாது!!!

Author: Hemalatha Ramkumar
25 April 2022, 3:39 pm

உருளைக்கிழங்கை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி ‌சாப்பிடுவர். இந்த, உருளைக்கிழங்கு மசாலாவை சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, தக்காளி சாதம் , வெரைட்டி ரைஸ் போன்ற ரெசிபிகளுக்கு சைடிஸாக தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். உருளைக்கிழங்கு மசால் மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4
வெங்காயம் – 2
தக்காளி – 1
பூண்டு – 4 பற்கள்
சோம்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள்- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:
*முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து,தோலுரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* பிறகு, பூண்டு மற்றும் சோம்பை தட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும். பின்பு, தட்டி வைத்துள்ள பூண்டு, சோம்பு விழுதை சேர்க்கவும்.

*பின் கறிவேப்பிலை ஒரு கொத்து, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு, வேகவைத்த ‌உருளைக்கிழங்கை‌ சேர்க்க வேண்டும்.

*உருளைக்கிழங்கை கிளறி விட்டு பின் சேர்க்க வேண்டிய மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

*பிறகு, மூடி போட்டு ஐந்து நிமிடம் கழித்து உருளைக்கிழங்கை கிளறி விட்டு, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சுவையான, உருளைக்கிழங்கு மசால் தயார்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 1260

    0

    0