குழந்தை பிறந்ததால் வருத்தத்தில் காஜல் அகர்வால் : இப்படியும் ஒரு சோகமா!!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2022, 5:11 pm
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். கர்ப்பமான பிறகும், காஜல் அகர்வால் கவர்ச்சி போட்டோக்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் நடிகை காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது பேமிலி, குழந்தை என செட்டிலாகியுள்ள காஜலுக்கு ஒரு சோகம் நேர்ந்துள்ளது.
ஆம், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சார்யா படத்தில் நடிகை காஜல் தான் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் தற்போது அவர் படத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.