ஸ்ரீரங்கம் கோவில் ஊழல் புகார் அளித்த ரெங்கராஜன் நரசிம்மன் மீது தாக்குதல் : நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடம் நிகழ்ந்த மோதல்…!!

Author: Babu Lakshmanan
25 April 2022, 6:47 pm

திருச்சி : வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற ரெங்கராஜன் நரசிம்மனை வழக்கறிஞர் தாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜன் நரசிம்மன். இவர், ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் பல்வேறு விதிமீறல்கள், ஊழல்கள் குறித்து அறநிலையத் துறையினருக்கு புகார் அளித்தும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடுத்து வருகிறார்.

மேலும், இவர் மீது ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக சென்ற போது, அங்கு அவரது வழக்குரைஞர் சீனிவாசனை சந்தித்துள்ளார். அப்போது, இருவருக்கும் வழக்கு தொடர்பாக கருத்து வேறுபாடு காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ரெங்கராஜ நரசிம்மன் வழக்கறிஞர் சீனிவாசனை திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது சீனிவாசன் உடனிருந்த அவரது ஜூனியர் வழக்கறிஞர்கள் இரண்டு பேர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

உடனடியாக ரெங்கராஜன் நரசிம்மன் ஜூடிசியல் நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகளிடம் தன்னை தாக்க வருவதாக தெரிவித்தார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் அங்கு இருந்து அவரை பத்திரமாக வெளியே அனுப்பினர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக ரெங்கராஜன் தொலைபேசியில் தொடர்பு சொல்ல முயற்சித்த போது அவர் அழைப்பை எடுக்கவில்லை.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1277

    0

    0