கனிகாவின் செம்ம குத்தாட்டம்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள்.. வீடியோ வைரல். .!

Author: Rajesh
26 April 2022, 11:24 am

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

அவ்வபோது சமூக வலைத்தளங்களில்தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது, கனிகா மட்டும் ஆட்டம் போடாமல் டிடி அக்கா ப்ரியதா்ஷினி மற்றொரு சீரியல் நடிகை மூன்று பேரும் சேர்ந்து விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் பாடலான ஜாலியோ ஜிம்கான பாடலுக்கு செம்மையாக குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2002

    14

    1