டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் அஜித்..? மாஸான கதையை தேர்தெடுத்த சுதா கொங்கரா..!
Author: Rajesh26 April 2022, 3:40 pm
இது டபுதமிழில் சூரரைப்போற்றுஇ இறுதிச்சுற்று போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா. தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கயிருக்கிறார். இந்தப் படத்தை கேஜிஎப் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரித்து இருந்த ஹோம்பேல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இதுகுறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு முன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதிலிருந்து இந்தப் படத்தின் கதை மற்றும் நடிகர்கள் பற்றிய பல செய்திகள் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. ஏற்கனவே சுதா கொங்கரா தன்னுடைய அடுத்த படத்தின் ஹீரோ நிச்சயம் சூர்யாதான் என்று தெரிவித்திருந்தார்.
சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் இவர்களின் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சுதா கொங்கரா ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்திய கதையை இயக்க இருப்பதாகவும், அந்த சவாலான கதைக்கு சூர்யா பொருத்தமாக இருப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, இந்த படம் ஒரு வரலாற்று நிகழ்வை மையப்படுத்தியும், டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாகவும் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் ஒரு கேரக்டரில் தான் சூர்யா நடிக்கிறார். மற்றொரு முக்கியமான கேரக்டரில் நடிக்க நடிகா் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
கேஜிஎஃப் படத்தின் மூலம் பெரிய அளவில் லாபம் பார்த்த தயாரிப்பு நிறுவனம் தற்போது இந்தத் திரைப்படத்தையும் மிக பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படமும் இந்திய அளவில் பேசப்படும் ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காகத்தான் தயாரிப்பு நிறுவனம் தற்போது பக்காவாக பிளான் போட்டு காய் நகர்த்தி வருகிறது. இந்த கதையில் நடிப்பதற்கு அஜித் சம்மதிப்பாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஏனெனில் அவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனாலும் எப்படியும் அவரை சம்மதிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் தற்போது தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.