ஒரு எபிசோட் தொகுத்து வழங்க பிரியங்காவுக்கு இவ்வளவு லட்சமா..? வெளியான தகவல்!

Author: Rajesh
26 April 2022, 5:15 pm

வெள்ளித்திரையில் வலம் வரும் நடிகர், நடிகைகளை விட சின்னத்திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமானவர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையில், தொகுப்பாளர்களில் திவ்யதர்ஷினி என்கிற டிடியை தொடர்ந்து, ரசிகர்களை தன்னுடைய துறுதுறு பேச்சால் அதிகம் கவர்ந்தவர் பிரியங்கா.

இவர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். இதுதவிர ஒல்லி பெல்லி, ஸ்டார்ட் மியூசிக், தி வால் போன்ற நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார்.

இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலுத்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரை முன்னேறிய பிரியங்கா, டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டு 2-ம் இடத்தைப் பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்காக அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ.2 லட்சம் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!