200 ஆடுகளை வெட்டி 10 ஆயிரம் பேருக்கு ‘கிடா’ விருந்து : பழனி அருகே கோலாகலமாக நடந்த கோவில் திருவிழா!!

Author: Udayachandran RadhaKrishnan
27 April 2022, 12:34 pm

திண்டுக்கல் : பழனியில் கோவில் திருவிழாவில் 200 ஆட்டுகிடாய் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்து கோலாகலமாக நடைபெற்றது.

பழனியை அடுத்த கோம்பைபட்டி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியதுரையான் கருப்பணசாமி கோவில் .
பழமையான இந்த கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனோ தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது.

தற்போது தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கோயில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 200 ஆட்டு கிடாய்கள் கருப்பணசாமிக்கு பலிகொடுக்கப்பட்டது.

பின்னர் பத்தாயிரம் பக்தர்களுக்கு அசைவ விருந்து தயார் செய்யப்பட்டது. அதற்காக இருபதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை கொண்டு பெரிய அளவில் பாத்திரங்களை பயன்டுத்தி அசைவ உணவுகள் தயார் செய்யப்பட்டன.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து சாமி தரிசனம் செய்தனர். பெரியதுரையான் கோவிலில் விவசாயிகள் வளர்த்து கிடாய் வெட்டி பூஜை செய்து வணங்குவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாகவும், நல்ல விளைச்சலும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…