பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழகம்… சிரமப்படும் மக்கள்… முதலமைச்சர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி சுளீர்…!!

Author: Babu Lakshmanan
27 April 2022, 2:47 pm

பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழகம் உள்பட சில மாநிலங்கள் குறைக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்களின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது ;- கடந்த 2021 நவம்பர் மாதமே எரிபொருள் மீதான வரியை மத்திய அரசு குறைத்து விட்டது. ஆனால், பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் குறைக்கவில்லை. வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்.

தமிழகம் உள்பட எதிர்கட்சிகள் ஆளும் 4 மாநிலங்கள் மத்திய அரசின் எந்த அறிவிப்புகளுக்கும் செவி சாய்ப்பதில்லை. இதனால், அம்மாநில மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.111க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலை மற்றும் வாட் வரியை குறைக்க வேண்டும். வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும், எனக் கூறினார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 1356

    0

    0