மீண்டும் புதுப்பொலிவு பெறும் ஸ்மார்ட் சிட்டி பகுதிகள் : கோவை மக்கள் மகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 April 2022, 7:25 pm

கோவை : பராமரிக்கப்படாமல் கிடந்து வந்த கோவை ஸ்மார்ட் சிட்டி தற்போது புதுப்பொலிவு பெறுவதால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவையின் புதிய அடையாளமாக மாறிய ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, உக்கடம் பெரிய குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஐ லவ் கோவை வடிவமைப்பை காண மக்கள் திரண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், அந்தப் பகுதிகளில் எல்லாம் புதர்கள் மண்டியும், செடி, கொடிகள் படர்ந்தும் காணப்பட்டன. இதனால், பூச்சி, புழு அச்சுறுத்தல் இருக்குமோ..? என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்தது. எனவே, இந்த புதர்களை அகற்றி, பொதுமக்கள் அச்சமின்றி பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை ஸ்மார்ட்சிட்டி பகுதிகளில் மண்டிக்கிடந்த புதர்களையும், செடிகளையும் அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடையும் போது, இன்னும் அழகாக அந்தப் பகுதிகள் காட்சியளிக்கும் என்பதா, பொதுமக்களின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் புதுப்பொலிவு பெறுவதால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • RJ Balaji Apologizes to Sivakarthikeyan சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி…எதற்குனு தெரியுமா..?
  • Views: - 1075

    0

    0