செல்போனில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்… கொறடாவிடம் பெண் எம்பிக்கள் பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
29 April 2022, 9:35 am

பாராளுமன்ற அலுவல் நேரத்தில் அமைச்சர் ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக பிரிட்டன் பெண் எம்பிக்கள் பரபரப்பு புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பியா நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், அலுவல் நேரத்தில் அமைச்சர் ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக ஆளும் பழமைவாத கட்சியைச் சேர்ந்த 12 பெண் எம்.பி.,க்கள், அரசு தலைமை கொறடா கிறிஸ் ஹீடன் ஹாரிஸிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட கொறடா, இது தொடர்பாக நாடாளுமன்ற குறை தீர்ப்பு குழுவின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டார். இக்குழு அளிக்கும் அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட அமைச்சரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…