ஸ்மோக்கிங் ரூமில் என்ன செய்தேன்.. பிக் பாஸ் அபிராமி Open Talk.. !

Author: Rajesh
29 April 2022, 11:22 am

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. அதனைத் தொடர்ந்து, ழுவுவு தளத்தில் அதன் 24 மணி நேர ஷோ ஒளிபரப்பாகி வந்தது. சில பல காரணங்களால், கமல் ஹாசன் விலகவே சிம்பு தொகுத்து வழங்கி வந்தார். இதில் முதல் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்றனர்.

இதில் முக்கியமாக பிக்பாஸ் அல்டிமேட்டில் அபிராமி மற்றும் பாலாஜி, அபிராமி மற்றும் நிரூப் பற்றி அதிகமாக பேசப்பட்டது. அபிராமி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் நெருக்கமாகவே இருந்தனர். இந்நிலையில் தற்போது அபிராமி இன்ஸ்டாவில் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய வீடியோ செம வைரல் ஆகி வருகிறது. அப்போது ஸ்மோக்கிங் ரூமில் பாலா உடன் என்ன நடந்தது? என ஒரு ரசிகர் கேட்டிருக்கிறார்.

அதற்கு, அபிராமி ‘எதுவுமே நடக்கவில்லை’ என விளக்கம் கொடுத்து இருக்கிறார். ‘எதுவும் நடக்கல. அது தான் உண்மை. எதையும் தைரியமாக கூறி விடுவேன். மக்கள் 24 மணி நேரமும் பார்க்கும் ஷோவில் அப்படி செய்யக்கூடாது என்கிற இங்கிதம் எல்லோருக்கும் கண்டிப்பாக இருக்கும்’ என அவர் கூறி உள்ளார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!