மீண்டும் தலைதூக்கும் ‘ரூட்டு தல’ மோதல் : பேருந்து நிலையத்தில் கத்தியை காட்டி கல்லூரி மாணவர்கள் ரகளை..பேருந்து கண்ணாடி உடைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2022, 11:29 am

திருவள்ளூர் : செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கத்தியுடன் சுற்றி திரிந்த 7 பேரை பிடித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த சில ஆண்டுகளாக சென்னை அம்பேத்கர் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குள் கோஷ்டி மோதல் இருந்து வருகிறது .
இந்த நிலையில் நேற்று மாலை செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே பயணிகளை அச்சுறுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுப்பட்டனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவரின் பல் உடைந்தது. அங்கிருந்த பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார் மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் தடம் என் 65எச் என்ற செங்குன்றம் திருவள்ளூர் செல்லும் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பேருந்தின் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கே வந்த அம்பேத்கர் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கிரிக்கெட் மட்டையுடன் இந்த மாணவர்களிடம் திடீரென தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் எஸ்ஆர்எம் கல்லூரியில் பயின்று வரும் பட்டாமிராமை சேர்ந்த ராஜன் (வயது 20) என்ற மாணவருக்கு பல் உடைந்தது. அங்கே நிற்கப்பட்ட பஸ்ஸின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது ‌.

இச்சம்பவத்தால் அங்கேயிருந்த பயணிகள் அச்சத்துடன் நாலாபுறமும் உயிரைகாப்பாற்ற சிதறி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கே தகராறில் ஈடுபட்ட இருகல்லூரியை சேர்ந்த 7 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1015

    0

    0