ஊருக்குள் சுற்றிய காதல் ஜோடி : திருட வந்தவர்கள் என நினைத்து ஊருக்கு நடுவே கட்டி வைத்து அடி உதை.. நடந்த ட்விஸ்ட்!!
Author: Udayachandran RadhaKrishnan30 April 2022, 9:43 am
கன்னியாகுமரி : தக்கலை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஜோடியை திருடர்கள் என்று ஊர் பொதுமக்கள் அடித்து உதைத்து கொடி மரத்தடியில் கட்டி வைத்து நிலையில் போலீசார் படுகாயமடைந்த அவர்களை மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செயின் அறுப்பு சம்பவங்கள், வீடுகள், ஆலயங்களில் திருட்டு என பல கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன
இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் தங்களது கிராமம் மற்றும் தெருக்களில் புதிதாக வரும் நபர்களை சந்தேகத்துடனே பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது
இந்த நிலையில் இன்று தக்கலை அடுத்த ஆர்.சி தெருவில் சந்தேகத்திற்கு இடமாக புதிதாக ஒரு ஜோடி அங்கும் இங்குமாக சுற்றி திரிந்துள்ளது. இந்த தகவல் தெரு முழுவதும் பரவியது.
இதையடுத்து அங்கு திரண்ட ஆர்.சி தெருவை சேர்ந்த பொதுமக்கள் அந்த ஜோடியை சரமாரியாக அடித்து உதைத்து கோயில் கொடி மரத்தடியில் கட்டி வைத்து திருடர்களா? என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொடி மரத்தடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த ஜோடியை மீட்டனர்.
இதனையடுத்து தாக்குதலில் காயமடைந்த அந்த ஜோடியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவர்கள் யார்? எதற்காக அந்த பகுதிக்கு வந்தனர் திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களா என பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த சந்தேகத்திற்கிடமான ஜோடியை ஊர் மக்கள் அடித்து உதைத்து கொடி கம்பத்தில் கட்டி வைத்திருப்பதும் அவர்களை போலீசார் மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.