கோயம்(பு)த்தூரா? கோயம்(ப)த்தூரா? ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்.. குழப்பத்தில் பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 2:48 pm

கோவை : மத்திய அரசின் திட்டங்களில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் எழுத்தில் ரயில் நிலைய ஊர்களின் பெயர்ப்பலகைகளில் உள்ள பெயர்கள் கூட பிழையுடன் எழுதுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் ரயில் நிலையம் ஆறு நடைமேடைகள் 20 இரும்பு பாதைகளை கொண்ட தென்னிந்தியாவின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோயம்புத்தூரின் சிறப்பு வாய்ந்த இந்த ரயில் நிலையத்தின் பெயர் தமிழில் கோயம்பத்தூர் ரயில் நிலையம் என ரயில் நிலையத்தின் பின் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.

Coimbatore Railway Station

ரயில் நிலையத்தின் முன்வாசலில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் என எழுதப்பட்டு உள்ள நிலையில் பின் வாசலில் கோயம்பத்தூர் என தவறாக பெயர் பலகையில் எழுதப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றான கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் தமிழில் எழுதும்போது பிழையுடன் எழுதப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரயில்வே துறை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்டபோது பின் வாசலில் கோயம்பத்தூர் என பெயர் பலகையில் எழுதப்பட்டுள்ளது தொடர்பாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது விரைவில் இது சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!