பைக் மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து : நண்பர்கள் 3 பேர் பலியான சோகம்..!!

Author: Babu Lakshmanan
30 April 2022, 6:06 pm

திருவண்ணாமலை : செங்கம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த நண்பர்கள் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையம் ஆவின் பால் பண்ணை அருகே தொரப்பாடியில் இருந்து செங்கம் நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது தர்மபுரியில் இருந்து மலையனூர் கோவிலுக்கு அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதியது.

இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தொரப்பாடி பகுதியை சேர்ந்த பிரபு, பரமசிவம், மணி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் தகவலறிந்து வந்த பார்சல் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!