ஆளுங்கட்சி பிரமுகர் படுகொலை… ஆறுதல் கூற சென்ற எம்எல்ஏவுக்கு தர்ம அடி : சொந்த கட்சி நிர்வாகியை திட்டமிட்டு கொன்றதாக புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2022, 1:20 pm

ஆந்திரா : ஏலூர் அருகே ஒய்எஸ்ஆர் காங்., பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில்
ஆறுதல் சொல்ல சென்ற ஆளும் கட்சி எம்எல்ஏ.க்கு தர்ம அடி கொடுத்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் , ஏலூர் மாவட் டம் , துவாரகா திருமலை மண்டலத்தில் உள்ள ஜி.கோட்டப்பள்ளி கிராம தலைவர் கஞ்சி பிரசாத். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான அவர் , நேற்று முன்தினம் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் .

இந்த நிலையில் நேற்று காலை கஞ்சி பிரசாத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ஆளும் கட் சியை சேர்ந்த கோபாலபுரம் எம்எல்ஏ தலாரி வெங்கட்ராவையும் அவருடன் பாதுகாப்புக்காக சென்ற போலீசாரையும் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சரமாரியாக தாக்கினர் . இதில் எம்எல்ஏ படுகாயமடைந்தார் .

இதையடுத்து எம்எல்ஏ.வின் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர் . கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தியவர்களும், ஒய்எஸ்ஆர் கட் சியை சேர்ந்தவர்கள்தான் என தெரிய வந்துள்ளது. கஞ்சி பிரசாத்திற்கு எதிரான கோஷ்டியை எம்எல்ஏ வெங்கட்ராவ் ஊக்குவித்து வந்ததாகவும், அவர்கள்தான் பிரசாத்தை கொன்றதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரம் கிராமத்தில் உள்ள ஒருகடையை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில் கொலை செய்ததாக குற்றவாளிகள் சிலர் போலீசில் சரணடைந்து உள்ளனர் .

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!