ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் கொடுக்க வந்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய எஸ்.ஐ : ஆபாச வார்த்தையில் திட்டி அனுப்பிய வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2022, 12:59 pm

ஆந்திரா : காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறிக் கொள்ளும் நிலையில் புகார் அளிக்க வந்தவரை தகாத வார்த்தைகளால் பேசிய எஸ்.ஐ தாக்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் சிலமஞ்சரி மண்டலம் சஞ்சீவிராயனி கிராமத்தை சேர்ந்தவர் வேணு. மாற்றுத்திறனாளியான இவருடைய தாய் பத்மாவதிக்கு அரசு வழங்கும் உதவித்தொகை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த நிலையிலும் வழங்கப்படவில்லை என ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தாமோதர் ரெட்டியிடம் புகார் தெரிவித்தார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தாமோதர் ரெட்டி சிலமஞ்சரி காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்த நிலையில் வேணுவும் புகார் அளிக்க சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ ரங்க யாதவ் புகார் கொடுக்க வந்த வேணுவை தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கினார்.

போலீஸ் அத்துமீறல் தொடர்பான இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில் காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறி கொண்டு அதற்கு மாறாக நடத்தை கொண்ட எஸ்.ஐ ரங்க யாதவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது.

புகார் அளிக்கச் சென்ற நபரை போலீசார் தாக்கிய சம்பவத்தால் சிலமஞ்சரி பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்