தண்டவாளத்தை கடந்த பசுமாடு…ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய வீடியோ: குவியும் பாராட்டு!!(வீடியோ)

Author: Rajesh
2 May 2022, 8:27 pm

மதுரை: ரயில் என்ஜின் சோதனை ஓட்டத்தின்போது தண்டவாளத்தின் குறுக்கே வந்த மாட்டை காப்பற்ற ரயிலை நிறுத்தி மாட்டை விரட்டிய ரயில் ஓட்டுநரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் போடி அகல ரயில் பாதை பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று பழங்காநத்தம் மாடக்குளம் இணைப்பு ரயில்வே கேட் வழியாக மதுரையில் இருந்து தேனி நோக்கி சோதனை ஓட்ட ரயில் இன்ஜின் வருவதற்காக இருபுறமும் ரயில்வே கேட் அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் ரயில்வே கேட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பசுமாடு ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது. இதனை சற்று தூரத்திலேயே கவனித்த ரயில் ஓட்டுனர் வேகத்தை குறைத்து ஹாரன் சத்தம் கொடுத்தபடியே சென்றுகொண்டிருந்தார்.

இருப்பினும் பசுமாடு தண்டவாளத்தில் நடுவழியில் நின்று கொண்டிருந்தது உடனடியாக அவர் இன்ஜினை நிறுத்தி கீழே இறங்கி பசுமாட்டை விரட்டிய பின்னர் ரயில் புறப்பட்டது.

ஓட்டுநரின் சாதுரியத்தால் பசுமாடு ரயிலில் இருந்து அடிப்படாமல் தப்பியது அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!