வகுப்பறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மீது விழுந்த மின்விசிறி : பதறியடித்து ஓடி வந்த தலைமையாசிரியர்…!!!
Author: Udayachandran RadhaKrishnan3 May 2022, 12:48 pm
ஆந்திரா : தேர்வு எழுதி கொண்டிருந்த போது மின்விசிறி கழன்று விழுந்து மாணவி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் உள்ள சோமந்தபள்ளி கிராமத்தில் இருக்கும் விஞ்ஞான் பள்ளியில் நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது.
அப்போது தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவி ஒருவரின் தலைக்குமேல் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி திடீரென்று கழன்று விழுந்தது.
இந்த சம்பவத்தில் மின்விசிறியில் ஒரு இறக்கை அந்த மாணவியின் கண்ணுக்கு கீழ்பட்டு அவர் லேசான காயம் அடைந்தார். இதனால் தேர்வு அறையில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியை மருத்துவரை ஏற்பாடு செய்ததையடுத்து மாணவிக்கு பள்ளியிலேயே முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் தொடர்ந்து அந்த மாணவி தேர்வு எழுதினார். இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் உள்ள தேர்வு அறைகளில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து மின் விசிறிகளும் நேற்று மீண்டும் ஒரு முறை சரிபார்க்கப்பட்டன.