சிகரெட் விக்காம எதுக்கு ஆவின் பாலகம் நடத்துறீங்க? மதுபோதையில் ஆவின் பணியாளரை தாக்கி காங்கிரஸ் பிரமுகர் ரகளை…!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2022, 4:06 pm

விழுப்புரம் : புதிய பேருந்து நிலையம் எதிரே உயர்கல்வி துறை அமைச்சரால் துவங்கி வைக்கப்பட்ட ஆவின் பாலகத்தில் சிகரெட் கேட்டு மதுபோதையில் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் ரகளையில் ஈடுபட்டு பணியாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உயர்கல்வி துறை அமைச்ச்சர் பொன்முடி அவர்களால் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆவின் டீ ,பால் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை திறந்து வைத்தார்.

இந்த கடையை சுந்தர் என்பவர் நடத்தி வருகின்ற நிலையில் நேற்று இரவு விழுப்புரம் நகராட்சி 42 வது வார்டு உறுப்பினராக உள்ள காங்கிரசை சார்ந்த சுரேஷ் ராம் என்பவர் நகராட்சி ஒப்பந்ததாரர்களான விஜி மற்றும் அவரது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஆவின் பாலகத்திற்கு சென்று சிகரெட் கேட்டுள்ளனர்.

ஆவின் பாலகத்தை நடத்துவதால் இங்கு சிகரெட் விற்பனை செய்வதில்லை என கடையில் பணிபுரியும் 55 வயதான வீரகுமார் என்பவர் தெரிவித்துள்ளார். சிகரெட் விற்பனை செய்யாமல் ஏன் ஆவின் பாலகம் நடத்துகிறீர்கள் என கேட்டு காங்கிரஸ் நகரமன்ற உறுப்பினர் சுரேஷ் ராம் மற்றும் அவரது நண்பர்கள் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டி பணியாளரின் சட்டையை இழுத்து பாட்டிலால் அடித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ஆவின் பாலக கடை உரிமையாளர் சுந்தர தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மது போதையில் ரகளையில் ஈடுபடுவது தெரியவந்தது.

அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மது போதையில் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் சிகரெட் கேட்டு ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி விழுப்புரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பணி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினரே மது போதையில் ரகளை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1276

    0

    0