டிஆர்பியில் மந்தமான பிரபல ரியாலிட்டி ஷோ..? பக்கா பிளான் போடும் பிரபல நடிகர்..!
Author: Rajesh4 May 2022, 11:44 am
விஜய் டிவியிலிருந்து பிரபலமாகி வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் பலர். அதில் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற நடிகர்கள் பல முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். அதேபோல் தற்போது சரத், தீனா, புகழ், சிவாங்கி போன்றவர்களும் தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 3 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சமையலுடன், நகைச்சுவையும் இணைந்திருக்கும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தளபதி விஜய்க்கு கூட இதுதான் ஃபேவரட் ஷோவாம்.
ஆனால் கடந்த 2 சீசன்களாக டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த சீசனில் சற்று மந்தமாகத்தான் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் புகழ்தான் என்று கூறப்படுகிறது. தற்போது புகழ் படங்களில் பிஸியாக உள்ளதால் இந்நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை.
இதனால் இந்நிகழ்ச்சியில் புதிய கோமாளிகள் பலரை இறக்கியுள்ளது. இதனால் சுவாரஸ்யம் சற்றுக் குறைந்து இருப்பதால் ரசிகர்கள் அதிகம் இந்நிகழ்ச்சியை பார்ப்பதை குறைத்துக் கொண்டனர். இதனால், சிவகார்த்திகேயனை இந்தவார குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு டி.வி.நிர்வாகம் அழைத்துள்ளது. இதனிடையே, சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரமோஷனையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம் என நினைத்து தான் உடனே அந்த நிகழ்ச்சிக்கு அவர் வர சிவகார்த்திகேயன் சம்மதித்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.