பொது இடத்தில் பிரபல திரைப்பட இயக்குனரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்.. வீடியோ வைரல்..!

Author: Rajesh
4 May 2022, 12:51 pm

மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தினை தொடர்ந்து கைதி, மாஸ்டர் திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். இந்த நிலையில் தற்போது ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தினை வெளியிடுவதற்கான இறுதி கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சொந்த விஷயம் காரணமாக மதுரவாயலில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு லோகேஷ் கனகராஜ் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?