பல்லக்கை யாரும் தூக்கவும் வேணாம்… யாரும ஏறவும் வேணாம்.. தருமபுர ஆதினம் குறித்து மதிமுக பிரமுகர் மல்லை சத்யா..!!
Author: Babu Lakshmanan4 May 2022, 1:11 pm
தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்டது குறித்து மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் தேவதானம் ஶ்ரீரங்கநாதர் கோவிலில் உள்ள பரம்பரை தர்மகர்த்தாவை நீக்கி,கோவிலுக்கு சொந்தமான 144 ஏக்கர் விளை நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவிலை கொண்டுவரக் கோரி திருவள்ளூர் மாவட்டத்தில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணை பொது செயலாளர் மல்லை சத்யா அந்தரிதாஸ் தலைமையில் கோவில் முன்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா பேசியதாவது :- திருவாடுதுறை அதீனத்தில் பல்லக்கிலும் யாரும் ஏற வேண்டாம். பல்லக்கினை யாரும் தூக்க தேவையில்லை. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜகவின் கைக்கூலி நடிகை இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்பதை மறுக்கவிலை.
ஆனால் இந்தி மொழியைத் திணிக்க வேண்டாம் என்பதே திராவிட இயக்கத்தின் அடிநாதம். கோவில்களை வைத்து எவரும் கொள்ளை அடிப்பதை தடுக்க தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் முன்வர வேண்டும், என அவர் தெரிவித்தார் .